
நிலக்கோட்டையில் ரோசாப்பூத்துரை 138 பிறந்த தினத்தில் அரசு கள்ளர் பள்ளிகளில் ஆசிரியர் காலி இடங்களை நிரப்ப வலியுறுத்தி உறுதிமொழி
நிலக்கோட்டை,ஜூன். 5-
இந்தியாவில் பிரமலைக் கள்ளர் இனத்திற்கும் மற்றும் டி.என்.டி மக்கள் மீது அநீதியாக சுமத்தப்பட்ட குற்றப்பரம்பரை சட்டம், கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய பிரமலைக்கள்ளர் இன மக்கள் பெருங்காமநல்லூரில் 1920 ஏப்ரல் 3 ல் ஏற்பட்ட போரில் ஆங்கில அரசின் துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை முதலில் எதிர்த்து பிரிட்டிஸ் அரசாங்கத்திடம் வாதாடிய போற்றுதலுக்குரிய சுயநலமற்ற மேன்மைமிகு ஜார்ஜ் ஜோசப் அவர்களின் பிறந்த தினம் 5.6.1887 ஆம் தேதியில் பிறந்தார்.
அவரது 138 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நிலக்கோட்டை, சுண்ணாம்பு காளவாசல், அணைப்பட்டி ரோடு பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு அலுவலகத்தில் பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொருளாளர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. விழாவில் வீரவணக்கம், திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், செலுத்தியும், இனிப்புகள் வழங்கியும், தமிழக முதலமைச்சர், கல்வித் துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு கள்ளர் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணி காலியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
விழாவில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் வக்கீல் மாயாண்டி, அகில இந்திய பிரமலைக்கள்ளர் மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புத்தரசன், மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் வசந்தி, பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பின் மூத்த நிர்வாகிகள் மாயத்தேவர், பொன்னையா தேவர், பிச்சை, பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாவட்ட பொறுப்பாளர் சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்,