August 14, 2025
நிலக்கோட்டையில் நடந்த ஜமாபந்தியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர் உரிய நடவடிக்கை எடுக்க ஆர்டிஓ உத்தரவு.

நிலக்கோட்டையில் நடந்த ஜமாபந்தியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர் உரிய நடவடிக்கை எடுக்க ஆர்டிஓ உத்தரவு.

நிலக்கோட்டை, மே.29 –

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் தலைமையில் நேற்று வத்தலக்குண்டு வருவாய் கிராமத்தில் உள்ள வத்தலகுண்டு, கோம்பை பட்டி, கணவாய்ப்பட்டி, விராலிப்பட்டி, சேவுகம்பட்டி, செங்கட்டாம்பட்டி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளுக்கு வருவாய் தீர்வாய ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. முகாமில் ஏராளமான மனுக்கள் பட்டா மாறுதல், சாலை வசதி, வாரிசு சான்று, இரண்டு பெண் குழந்தைகள் சான்று, உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் குவிந்தன.

இந்த மனுக்களை பெற்ற திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உடனடியாக உத்தரவிட்டார். இம் முகாமில் நிலக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி, வருவாய் ஆய்வாளர் பரிமளா, கிராம நிர்வாக அலுவலர்கள் சுமதி, நாகராஜ் ,சரண்யா, செந்தில்நாதன்,சோபனா, மாணிக்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *