
தேனி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி பங்கேற்பு
தேனி மே.21
தேனி தனியார் ஹோட்டலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறச் செய்வது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியாமல் போனது. 2026 சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்றும், திமுக அரசின் திட்டங்கள், சாதனைகளை பொதுமக்களிடத்தில் எடுத்துரைக்க வேண்டும் என்றும், திமுக அரசுக்கு எதிரான பொய்யான அவதூறுகளை முறியடித்து, தமிழர்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வரும் திராவிட மாடல் அரசு மீண்டும் அமைய ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், முன்னாள் எம்எல்ஏ மூக்கையா, சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் முத்துராமலிங்கம், தேனி நகராட்சி தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், பெரியகுளம் நகர செயலாளர் முகமது இலியாஸ், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், கெங்குவார்பட்டி பேரூர் செயலாளர் தமிழன், முன்னாள் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஸ்டீபன், தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜசேகர், துணை அமைப்பாளர் கார்த்திக், சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் ஷேக் அப்துல்லா மற்றும் மாநில, மாவட்ட , ஒன்றிய ,நகர ,பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .