August 8, 2025
தென்காசி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட தொழில் மையம் தென்காசி அலுவலகம் மூலம் தமிழக அரசின் குறுங்குழும தமி்ட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள ஆலங்குளம் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் குழுமத்தை" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் டம் குன்றத்தூர் அரசு சேக்கிழார் பள்ளி வளாகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட தொழில் மையம் தென்காசி அலுவலகம் மூலம் தமிழக அரசின் குறுங்குழும தமி்ட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள ஆலங்குளம் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் குழுமத்தை" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் டம் குன்றத்தூர் அரசு சேக்கிழார் பள்ளி வளாகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட தொழில் மையம் தென்காசி அலுவலகம் மூலம் தமிழக அரசின் குறுங்குழும திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள ‘ஆலங்குளம் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் குழுமத்தை” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (19.04.2025) காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அரசு சேக்கிழார் பள்ளி வளாகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து, ஆலங்குளம் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் குழுமத்தில் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி நாடாமன்ற உறுப்பினர் மரு.ராணிஸ்ரீகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டு இக்குழுமத்தின் ஆடை வடிவமைப்பு மாதிரியை வெளியிட்டனர்.

மேலும், ஆலங்குளம பண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்.

குழுமம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் அமைந்துள்ள பொதிகை சாய்பாபா அப்பேரல்ஸ் என்ற நிறுவனத்துடன் ஆயத்த ஆடைகள் உற்பத்திக்கான முதல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை பரிமாறிக் கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோ தெரிவித்ததாவது, தமிழக அரசின் குறுங்குழும திட்டம் என்பது குறு, மற்றும் சிறுநிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் நீடித்த நிலைத்த தன்மையினை ஊக்குவிக்கும் ஒரு திட்டமாகும்.

இத்திட்டத்தின் மூலம் ஓரே வகையான தொழில். மேற்கொள்ளும் குறைந்தபட்சம் 20 நபர்களை ஒன்றிணைத்து குழுமத் தொழில்களை தொடங்குவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், இயந்திரங்களை நிறுவுவதற்கான வசதிகள், பொதுவான வசதியாக்கல் மையங்களை நிறுவுதல் மற்றும் நிலையான உற்பத்தி நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைககள் அரசின் 90% நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டமாகும்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சிக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெண்கள் அதிக அளவில் தையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் கூட்டாக இணைந்து ஆயத்த ஆடைகள் தயாரிக்க உத்தேசித்து குழுமத் தொழில்கள் மேற்கொள்ள மாவட்ட தொழில் மையம் தென்காசி வாயிலாக குறுங்குழுமத் திட்டத்தில் விண்ணப்பித்தனர்.

குறுங்குழுமத் திட்டம் மூலம் ஆயத்த ஆடை தயாரித்தல் மற்றும் எம்ப்ராய்டரி தையல் தொழில் செய்வதற்கு ஒரு குறுங்குழுமம் அமைப்பதற்கு தமிழக அரசால் ஆணை பெறப்பட்டு ரூ.1.15 கோடி திட்ட மதிப்பீட்டில நிறுவப்பட்டுள்ள ஆலங்குளம் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் குழுமம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த திட்டத்தின் வாயிலாக நேரடியாக 80-க்கும் மேற்பட்ட நபர்களுக்கும், மறைமுகமாக 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது.

இக்குழுமத்தின் மூலம் மெஷின் எம்பிராய்டரி, கை எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள், பேட்டர்ன் மேக்கிங், கட்டிங் மற்றும் ஸ்டிச்சிங், ஸ்டீம் அயர்னிங், பேக்கேஜிங் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்தக் குழுமம் தென்காசி மாவட்ட தொழில் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்க உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோ தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமதி.ப.மாரியம்மாள், ஆலங்குளம் ஒன்றியக் குழு தலைவர். திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் வட்டாட்சியர் திருமதி. ஓசன்னா, முன்னோடி வங்கி மேலாளர் ஆ.கணேசன், தென்காசி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன சங்கத் தலைவர் செ.அன்பழகன், ஆலங்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவகுமார், மாவட்ட தொழில் மைய அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆலங்குளம் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர். குழும இயக்குநர் எம்.வளர்மதி மற்றும் குழும உறுப்பினர், அரசு அலுவலர். ஆகியோர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *