
பெரியகுளத்தில் அம்பேத்கர் 134-வது பிறந்தநாள் விழா: தவெக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
பெரியகுளம் ஏப்.15
சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தேனி வடக்கு மாவட்டம் சார்பில் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலைக்கு தவெக வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் பாலமுருகன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் சீராளன், பெரியகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், இணைச்செயலாளர் கல்யாண் மன்னன், பொருளாளர் சங்கர், மகளிரணி பொன்னழகு, வடக்கு ஒன்றிய செயலாளர் சபரி, இணைச்செயலாளர் சிவா, பொருளாளர் சக்தி, தாமரைக்குளம் பேரூர் நிர்வாகிகள் பாண்டிமுருகன், வினோத்குமார், தேவதானப்பட்டி பேரூர் செயலாளர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.