
கொங்கர் குளம் கிராமத்தில் முதுகில் அழகு குத்தி தேர் இழுத்த பக்தர் நேர்த்திக்கடன் பரவசம்
நிலக்கோட்டை, ஏப்.12 – திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கொங்கர்குளம் கிராமத்தில் உள்ள ஆதி ருத்ரேஸ்வரர் – மீனாட்சி அம்மன் கோவில் முன்பு கொங்கர்குளம் கிராம மக்கள் திரண்டு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள ஆதித்ரேஸ்வரருக்கும், மீனாட்சி அம்மையருக்கும், விநாயகருக்கும், முருகனுக்கும் சிறப்பு பூஜையில் செய்து அங்கு பக்தர் ஒருவருக்கு அழகு குத்தி, அதேபோன்று முதுகில் அழகு குத்தி முருகன் சுவாமி வைக்கப்பட்ட தேரை இழுத்தும், பக்தர்கள் பால்குடம் மேளதாளம் முழுங்க சிறுவர்கள் நடனமாடியபடி நாடக மேடை வழியாக கிராமம் முழுவதும் சுற்றி வந்து கிழக்குத் தெருவில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

கிராம பொது மக்கள் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொது மக்கள் செய்து இருந்தனர்.