
பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டியில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் புத்தகத் திருவிழா மற்றும் ஜெய்பீம் அம்பேத்கர் படிப்பகத்தில் அடிக்கல் நாட்டடினார் தங்கதமிழ் செல்வன் எம்.பி
பெரியகுளம் ஏப்-12
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தெ.கள்ளிப்பட்டியில் புரட்சியாளர் அம்பேத்கர் 134 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு மாபெரும் புத்தக திருவிழா மற்றும் ஜெய்பீம் அம்பேத்கர் படிப்பகம் அடிக்கல் நாட்டு விழாவை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து பேசுகையில் “ஜெய் பீம் அறக்கட்டளையானது கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
தேனி மாவட்டம் தென்கரை பேரூராட்சி கள்ளிப்பட்டியில் இது அடிகோலாக அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள நாயகம் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஜெய்பீம் அறக்கட்டளையின் சார்பில் மாணவர்கள் அமர்வதற்கு முதற்கட்டமாக சுமார் 47 ஆயிரம் மதிப்பீட்டில் ஆறு இருக்கைகள் வழங்கியது மன நிறைவாக உள்ளது.
இதேபோல் தேனி மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் இதுபோன்ற படிப்பகத்தை அதிகமாக உருவாக்கி மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்ற வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் ஜெய்பீம் அறக்கட்டளை நிர்வாகி வழக்கறிஞர் விஜி மணிவாசகம் படிப்பகம் அமைப்பதற்கு தனது சொந்த நிலத்தை வழங்கியது சிறப்பு வாய்ந்ததாகும்.கல்வி கற்க வாய்ப்புகள் இல்லாத காலத்தில் பல பட்டங்களை பெற்று எளிய மனிதனாலும் கல்வி கற்க இயலும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் புரட்சியாளர் அம்பேத்கர்.அவருடைய பிறந்தநாள் அன்று இதுபோன்ற கல்வி அறக்கட்டளைகள்மற்றும் படிப்பகங்கள் பல உருவாக வேண்டும் ” என்று பேசினார்.
பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு குத்துவிளக்கு ஏற்றினார்.பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் முதல் பிரதியை வெளியிட வி.சி.க தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ரபீக் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக உதவி பேராசிரியர் அமிர்தராஜ் வரவேற்புரையாற்றினார்.ஜெய்பீம் 2.0 அறக்கட்டளை ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி கனல்விழி,தென்கரை பேரூர் கழக தி.மு.க செயலாளர் பாலமுருகன், வி.சி.க. மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் கோமதி ஆனந்தராஜ்,வடகரை வாசகர் வட்ட தலைவர் மணி கார்த்திக்,திராவிட கழக பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன், வி.சி.க.பெரியகுளம் ஒன்றிய செயலாளர் ஆண்டி, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி கருப்பையா,நாயகம் நடுநிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் செல்லத்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ்,நாயகம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகுமாரி,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர், கார்த்திக், தி.மு.க.மாவட்ட பிரதிநிதிகள் செல்லப்பா,சீனிவாசன், பழனிமுருகன்,அனைத்து சமூக நல்லிணக்க ஒருங்கிணைப்பாளர் காமராஜ் பாண்டியன்,வழக்கறிஞர்கள் காமாட்சி (எ)கரிகாலன்,சுதாகர், மார்ஷல் ,திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் ஆதி தமிழன் ,ஆசிரியர் ராஜமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கள்ளிப்பட்டியாய் எழுவோம் இளைஞர்கள் நலக்குழு நிர்வாகிகள் வழக்கறிஞர் விஜி மணிவாசகம், கவிஞர் பிரியதர்ஷினி,கோடை பண்பலை அறிவிப்பாளர் ரங்கநாதன்,கவிஞர் அருண் அழகு,வங்கி மேலாளர் பழனியப்பன், திராவிடர் கழக நிர்வாகி சாமி ஸ்டிக்கர்,சமூக செயல்பட்டார்கள் கனிமுத்து,முத்துவேல்,சத்தியசீலன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.நிகழ்ச்சியின் முடிவில் கள்ளிப்பட்டி கிராம நிர்வாக தலைவர் காளியப்பன் நன்றி கூறினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள்,பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர் தெ. கள்ளிப்பட்டி கள்ளிப்பட்டி அதி சிலம்ப ஆசான் அஜித்குமார் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு சிலம்பாட்டம் ஆடி வரவேற்பு அளித்தனர்.இந்த புத்தக திருவிழாவில் 10,000 மேற்பட்ட புத்தகங்கள் பார்வைக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டனர்.