
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 8 கிராம் தங்க நாணயத்தினை வழங்கினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 14 மாற்றுத்திறனுடைய தம்பதியினருக்கு திருமண நிதியுதவித்தொகையுடன் தலா 8 கிராம் தங்க நாணயத்தினை வழங்கி தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் , பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
அதில், குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, மாற்றுத்திறன் கொண்டவர்களின் மறுவாழ்விற்கென எண்ணற்ற திட்டங்களை வழங்கி, அவர்களின் நலன் காத்து வருகிறார்கள்.
அதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிள் மூலம் நான்கு வகையான திருமண திட்டங்கள் தமிழக அரசால் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. கை, கால் பாதிக்கப்பட்ட இயக்கத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளியை நல்ல நிலையிலுள்ள உள்ளவர் திருமணம் செய்து கொள்ளும் திட்டம், செவித்திறன் பாதிக்கப்பட்டவரை நல்ல நிலையில் உள்ளவர் திருமணம் செய்து கொள்ளும் திட்டம், பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளவர் திருமணம் செய்து கொள்ளும் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி திருமணம் செய்து கொள்ளும் திட்டம் ஆகியவைகளின் கீழ் பட்டப்படிப்பு படிக்காத மாற்றுத் திறனுடைய தம்பதியினருக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் திருமண உதவித்தொகையாக ரூ.25,000/-மும், பட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனுடைய தம்பதியினருக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் திருமண உதவித்தொகையாக ரூ.50,000/-மும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மேற்கண்ட திட்டங்களின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் 2021-2022 நிதியாண்டு முதல் 2024-2025 நிதியாண்டு வரை மொத்தம் 55 மாற்றுத்திறனுடைய தம்பதியினருக்கு ரூ.21.50 இலட்சம் மதிப்பீட்டிலான திருமண உதவித்தொகையுடன் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு பயன்பெற்றுள்ளனர்.
அதில், 2024-25ஆம் நிதியாண்டின்படி திருமண உதவித்தொகை கோரி, விண்ணப்பித்த 14 மாற்றுத்திறனுடைய தம்பதியினர்களில் பட்டப்படிப்பு படித்த 8 மாற்றுத் திறனுடைய தம்பதியினர்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் தலா ரூ.50,000/- வீதம் மொத்தம் ரூ.04.00 இலட்சம் திருமண நிதியுதவிக்கான ஆணையும் மற்றும் பட்டப்படிப்பு படிக்காத 6 மாற்றுத்திறனுடைய தம்பதியினர்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் தலா ரூ.25,000/- வீதம் மொத்தம் ரூ.01.50 இலட்சம் திருமண நிதியுதவிக்கான ஆணையும் என, ஆக 14 மாற்றுத்திறனுடைய தம்பதியினருக்கு மொத்தம் ரூ.05.50 இலட்சம் மதிப்பீட்டில் திருமண நிதியுதவித் தொகையுடன் தலா 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு, மாற்றுத்
திறனானுடைய தம்பதியினர்கள் பயன்பெற்றுள்ளனர். இதுபோன்று, மாற்றுத் திறனாளிகள் நலனைக் கருத்தில் கொண்டு, அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது மட்டுமன்றி, மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கென பல்வேறு முகாம்களும் நடத்தப்பட்டு, அதன் வாயிலாக மாற்றுத்
திறனாளிகள் பயன்பெற்று வருகின்றனர் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத்
இந்நிகழ்வின் போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கா.பாலகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.