
மூக்கையா தேவர் பிறந்த தினம்
உசிலம்பட்டி:
தேமுதிக சார்பில் பி.கே.மூக்கையாத் தேவர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பி.கே.மூக்கைத்தேவரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தேமுதிக சார்பில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் கணபதி தலைமையிலான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தனர்.
இதில், மாநில பொதுக் குழு உறுப்பினர் கருமாத்தூர் பாண்டி, தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் ஒய். எஸ்.டி.சமுத்திர பாண்டியன், நகரச் செயலாளர் அசோகன், ஒன்றிய பிரதிநிதி தர்மா மாயி மற்றும் செல்லம்பட்டி,
சேடபட்டி, மற்றும் திருமங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.