
சர்வ சமய இப்தார் விருந்து.
நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேசம் ஹெல்த் சயின்ஸ் கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. நேசம் கல்லூரி இயக்குனர் முகம்மது அனிபா சாஹிப் வரவேற்புரை ஆற்றினார்.நேசம் கல்லூரி இயக்குனர்கள் டாக்டர் முகமது இப்ராகிம், KSM.யூசுப் சாஹிப், இஸ்மாயில் மஜீத், முஹம்மது யாசின், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மூன்றாம் ஆண்டு மாணவர் வசிம் இறை வணக்கம் ஓதினார்

சிறப்பு விருந்தினர்களாக இந்திய மருத்துவ சங்க தலைவர் மற்றும் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அபூபக்கர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் செய்யது உதுமான், இஸ்மாயில் ஐ டிஐ தாளாளர் நூர்தீன், சின்சியர் சமூக சேவை நிறுவன இயக்குனர் ஜமால் முகமது ஈஸா, காதர் முஹைதீன் சாஹிப், அர் ரஹ்மான் சங்க பொறுப்பாளர்கள் முஹம்மது அலி, அன்சாரி, டாக்டர் அஹமது யூசுப், நேரு யுவ கேந்திரா ஆலோசனை குழு உறுப்பினர் மிதார் மைதீன், யூ. எப் அகடமி இயக்குனர் உமர், முஸ்லீம் லீக் இளைஞர் அணி மாநில முதன்மை துணை தலைவர் கடாபி, மேலப்பாளையம் நகர செயலாளர் முஹம்மது ஜாஹிர், வழக்குரைஞர் மதார் முகைதீன், முஹம்மது சுல்தான், பாபா மெட்ரிக் மேல்நிலைபள்ளி தாளாளர் ஆபிதா பேகம்,பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலை பள்ளி ஆசிரியர் பொன்னு சாமி, ஆசிரியர் மைதீன் பிச்சை, சமூக சேவகி விஜயகுமாரி, தொழில் அதிபர் அனீஸ் பாத்திமா, டாக்டர் பர்வேஸ், டாக்டர் கீதா, குலாம் மைதீன், கவுது ராஜா, தி மு க மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஹமீதா கல்லூரி மேலாளர் மதார் முஹைதீன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் தலைமையில் மாணவ மாணவியர்கள் சிறப்பாக செய்திருந்தினர்.