
தனித்தனி மாதிரி!
நானொரு மாதிரி நீயொரு மாதிரி நாமொரு மாதிரி
அவரொரு மாதிரி ஆளொரு மாதிரி அவரவர் ஒரு மாதிரி
காயொரு மாதிரி சுளையொரு மாதிரி கனியொரு மாதிரி
சுவையொரு மாதிரி சுகமொரு மாதிரி துய்ப்பொரு மாதிரி
தோலொரு மாதிரி விதையொரு மாதிரி வினையொரு மாதிரி
விழுப்பொரு மாதிரி முளைப்பொரு மாதிரி விளைப்பொரு மாதிரி
பயிரொரு மாதிரி பாட்டொரு மாதிரி பயனொரு மாதிரி
கேள்விகள் மாதிரி கிளர்ச்சிகள் மாதிரி கேட்பதும் மாதிரி
மாதிரி மாதிரி மயக்கங்கள் மாதிரி மகிழ்ச்சியும் மாதிரி
துய்த்தலாகி துறத்தலுமாகி தொன்மைகளாகி
கடத்தலுமாகி கவர்தலுமாகி கவலைகள்ஆகி
விழைவனவாகி வேற்றெனவாகி விருப்பங்கள் ஆகிஆகி
ஆய்ந்து ஆய்ந்து ஆளுமையாகி அசைவுகள் வந்து நடத்தலுமாகி
வேய்ந்து வேய்ந்து கூரைகளாகி விளங்க இருந்து வீடுகளாகி
நடந்து நடந்து பாதைகளாகி நன்மையும் தீமையும் உறவுகளாகி
பயந்து பயந்து நெறிகளாகி பாசமும் நேசமும் வழிவுகளாகி
அறிந்து அறிந்து மூடங்கள்களாகி அறியாமையிலே கனவுகளாகி
நீயொரு மாதிரி நானொரு மாதிரி நிழலும் நிழலும் வேறு வேறுமாதிரி!
அறங்களும் செயலும் அவை அவை மாதிரி
அறிவும் கூட அது அது தனியொரு மாதிரி.. மாதிரி !..

பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி