April 17, 2026
பாலமேட்டில் ஸ்ரீ சந்திரம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பாலமேட்டில் ஸ்ரீ சந்திரம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திரம்மாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க விக்னேஸ்வர பூஜை, தமிழ் திருமறை, மகாபூர்ணகுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வளம் வந்து பின்னர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் மீது புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ சந்திரம்மாள் திருக்கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *