June 8, 2025
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா : பெரியகுளம் நகர் திமுகவினர் மனநலம் குன்றியோர்களுக்கு அசைவ உணவு வழங்கி கொண்டாட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா : பெரியகுளம் நகர் திமுகவினர் மனநலம் குன்றியோர்களுக்கு அசைவ உணவு வழங்கி கொண்டாட்டம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இசிஆர்சி எனப்படும் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலன் அடைந்து வரும் 100 க்கும் மேற்பட்டோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்த நாளினை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் , பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பெரியகுளம் நகர் கழக செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் அசைவ உணவு வழங்கி கொண்டாடினர்.

முன்னதாக திமுக தலைமை கழகத்திலிருந்து அறிவிக்கப்பட்ட உறுதிமொழியினை பெரியகுளம் நகர் கழக நிர்வாகிகள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில், பெரியகுளம் நகர அவைத்தலைவர் வெங்கடாசலம் , நகர துணை செயலாளர் வாசுகி, சரவணன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் , ராஜபாண்டி, நகர பொருளாளர் சுந்தரபாண்டி , தேனி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கார்த்திக், நகர் மன்ற உறுப்பினர்கள் ரூபினி ஜான், பிரியங்கா ராஜ்குமார், முகமது அசினா, சுதா நாகலிங்கம் , பாண்டியராஜன், வைகை சரவணராஜா,வழக்கறிஞர் சக்தி மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.