June 8, 2025
உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!

உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..! உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!

உலகின் அனைத்து ரகசியமும் உன் உடலுக்கு உள்ளே..!

மந்திரம் தேடாதே ஒரு தந்திரமும் நாடாதே உன்னைத் தேடு..!

ஊர் ஊராக சுற்றாதே உன் உடலை சுற்று..!

ஊர் உனக்கு மகுடம் சூட்டி உத்தமன் என பட்டம் தந்தாலும்!

உடல் உன்னை கை விட்டால் உன் பட்டமும் உன் பதவியும்
பிடி சாம்பலாகி விடும்..!

புறத்தில் உன் குடும்பத்தை நேசித்தாய்….அது உன் குடும்பம் என கண்டும் கொண்டாய்…!

ஓடி ஓடி உழைத்தாய் உன் குடும்பத்திற்கு காவல் தெய்வமாக நின்றாய்..!

ஆனால் உனக்கு காவல் தெய்வமாக, உன் உயிருக்கு காக்கும் கடவுளாக,
இருப்பது உன் உடலே…!

அக குடும்பத்தை மறந்து விடாதே. உன் அக குடும்பம் உன் உடலே..!

உன் அக குடும்பம் சரியில்லை என்றால்
சூரிய குடும்பத்தில் நீ இருக்க இயலுவதில்லை..!

உன் உள் குடும்பம் உன் உடலே!

அதை மறந்தால் உன் வெளி குடும்பம் கதறினாலும்
உன்னை காக்கவும் யாரால் முடியும்..!

மற்ற உயிர்களுக்கு ஒருவன் செய்யும் பாவத்திற்கு
விமோசனம் உண்டு..!

ஒருவன் அவன் உடலுக்கே செய்யும் பாவத்திற்கு
விமோசனம் இல்லை…!

காரணம் அந்த உடல் அவன் உயிருக்காகவே
சிறப்பு மிக்க வரமாக கொடுக்கப்பட்டதால்..!

உடலுக்கு ஒருவன் செய்யும் தொண்டே பூஜை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.