
இந்து சமய பேரவை நிறுவன தலைவர் சுந்தர் பத்திரிகையாளர் சந்திப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருக்கோயிலின் திருவிழாவின்போது சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்யும் போது அந்தப் பேருந்துகளிலும் சாதாரண கட்டணமே வசூலிக்க வேண்டும் என்று இந்து சமய பேரவை கேட்டுக் கொள்கிறது.
மாசி மாதம் 20ஆம் தேதி அய்யா வைகுண்டரின் அவதார தினம் மார்ச் மாதம் நான்காம் தேதியில் இருந்து மண்டைக்காடு திருவிழா துவங்க உள்ளது எனவே மண்டைக்காடு திருவிழாவிற்காக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கும் அவ்வாறு இயக்கும்போது இந்துக்களுக்கு அதிகமான பேருந்து கட்டணத்தை வசூலிப்பதை நிறுத்திக் கொண்டு சாதாரணமாக வசூலிக்குமாறு ஹிந்து சமய பேரவை கேட்டுக் கொள்கிறது.
இந்துக்களுக்கு கோயில் செல்வதற்கு தரிசனம் செய்வதற்கு சிறப்பு தரிசனம் சிறப்பு பேருந்து என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை முகமதியர் ஆட்சி காலத்தில் ஜிஸியா வரி இந்துக்களுக்கு போட்டதை போன்று செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து வருகின்ற திருக்கோயில்களின் திருவிழாக்களில் அரசு ஏற்பாடு செய்யும் சிறப்பு பேருந்துகளில் சாதாரண கட்டணமே வசூலிக்குமாறு இந்து சமய பேரவை கேட்டுக் கொள்கிறது நன்றி.