
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக திரு பாஸ்கரன் அவர்கள் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் கள்ளத்தனமான மது விற்பனை ஒழிக்கப்படும் ரவுடிகள் கட்டுப்படுத்தப்படுவார்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படும் என்றார்.