
சோழவந்தான் அருகே கருப்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஐய்யனார் ஸ்ரீ கருப்பண்ணசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா.
சோழவந்தான் பிப் 10
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஐய்யனார் ஸ்ரீ கருப்பண்ணசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை
முதல் காலயாக பூஜை தொடங்கியது.
தொடர்ந்து அய்யனார் கருப்பண்ண சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து சனிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும் மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் அம்மச்சியாபுரம் கணேசபுரம் பொம்மன் பட்டி பாலகிருஷ்ணாபுரம் சாலாச்சிபுரம் ஆகிய சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது கும்பாபிஷேக ஏற்பாடுகளை கருப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்






