
பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விலையில்லா மோடி டீ ஸ்டால் மற்றும் மோடி மருந்தகம் துவக்கம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடம் பகுதியில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த முருக பக்தர்கள் குண்டடம் வழியாக பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விலையில்லா மோடி டீ ஸ்டால் மற்றும் மோடி மருந்தகம் பாதயாத்திரை பக்தர்கள் பயன்பெறும் வகையில் குமரன் மருத்துவமனை அருகில் குண்டடத்தில் பூஜையுடன் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
தலைமை பொன்.ருத்ரகுமார் மாநில செயற்குழு உறுப்பினர் கொங்கு ரமேஷ் ஓபிசி மாநில செயற்குழு உறுப்பினர் சுகுமார் கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் குண்டடம் கிழக்கு ஒன்றிய தலைவர் வெங்கடாசலம் குண்டடம் மேற்கு ஒன்றிய தலைவர் விஜயகுமார் கோவில் மேம்பாட்டு பிரிவு தலைவர் ஸ்ரீ ராம் மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் புவனேஸ்வரி சம்பத்குமார் முன்னாள் ஒன்றிய தலைவர் உலகநாதன் மற்றும் பாஜக நிர்வாகிகள், பெண்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.