
850 கபடி வீரர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழகச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ ஏற்பாட்டில் 850 கபடி வீரர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி பிப்ரவரி 2 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சுமார் 850 கபடி வீரர்களுக்கு 26 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் உபகரண பொருட்களை வழங்கி பேசினார் அப்போது அவர் உரையாற்றிய போது இனிவரும் காலங்களில் தமிழக அரசு சார்பில் தமிழக முழுவதும் அனைத்து கபடி வீரர்களுக்கும் காப்பீடு திட்டம் மற்றும் உபகரண பொருட்கள் வழங்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்பி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம் எல் ஏ, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் எம் எல் ஏ, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ரகு, கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா,நகர்மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் வி எஸ் ஹமீது சுல்தான், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் மண்டல துணைத் தலைவர் வினோத் பால் மற்றும் ராமநாதபுரம் கீழக்கரை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிர்வாகிகள் திமுக கீழக்கரை நகர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.