March 2, 2026
பேரறிஞர் அண்ணா நினைவு தினம்: வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் பொதுவிருந்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

பேரறிஞர் அண்ணா நினைவு தினம்: வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் பொதுவிருந்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தேனி மாவட்டம், வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் முன்னிலையில் பொது விருந்தினை தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுவிருந்தில் பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கி, அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவிலில் நேர்த்தி கடனாக வழங்கப்பட்ட பருத்தி புடவை மற்றும் வேஷ்டிகளை 50 ஏழை எளியோருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தானமாக வழங்கினார்.

இந்நிகழ்வில் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதாசசி, செயல்அலுவலர் நாராயணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *