March 3, 2026
தமிழக நாட்டுப்புற இசைக்கலை பெருமன்றம் சார்பாக கலைக்கூடல் திருவிழா

தமிழக நாட்டுப்புற இசைக்கலை பெருமன்றம் சார்பாக கலைக்கூடல் திருவிழா

திண்டுக்கல், பிச்சாண்டி மகாலில் தமிழக நாட்டுப்புற இசைக்கலை பெருமன்றம் சார்பாக கலைக்கூடல் திருவிழா நடைபெற்றது.

இதில் கலைஞர்கள் கலைஞர் மாளிகையில் இருந்து பிச்சாண்டி மகாலுக்கு மேல தலங்கள் முழங்க நடனமாடி சிலம்பாட்டம் கருப்பசாமி, திருவள்ளுவர் வேடம் விட்டு இசைக்கருவிகளை இசைத்தபடியே மகாலை வந்தடைந்தனர் இவ்விழாவில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

தொழிலதிபர் ஜி.சுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ஏராளமான நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் இசைக்கருவிகளுடன் கலந்து கொண்டனர் மற்றும் பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் நடன கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் நாட்டுப்புற நடன கலைஞர்களுக்கு பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் நினைவு பரிசு வழங்கினார்.

தலைமை நிருபர் : பாலசிந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *