
அரியலூர் மாவட்டம் வாரணவாசி பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி துவக்கிவைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை பொதுமக்கள் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பொது விநியோகத்திட்டத்தின்கீழ் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார்கள்.
இதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை நியாயிவிலைக்கடையில் இன்றைய தினம் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி, துவக்கி வைத்துள்ளார்கள்.
அதன்படி அரியலூர் மாவட்டம், வாரணவாசி நியாய விலைக்கடையில், கூட்டுறவுத்துறையின் சார்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.