April 17, 2026
ஜல்லிக்கட்டில் நன்கொடையாளர்கள் மூலம் பரிசு என அமைச்சர் அறிவிப்பு.

ஜல்லிக்கட்டில் நன்கொடையாளர்கள் மூலம் பரிசு என அமைச்சர் அறிவிப்பு.

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது . ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு தமிழக அரசு சார்பில் பரிசுகள் வழங்கப்படாது.

நன்கொடையாளர்கள் மூலமே பரிசுகள் வழங்கப்படும் அமைச்சர் மூர்த்தி பேட்டி அளித்தார். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டம், அவனியாபுரம் பாலமேடு அலங்கா
நல்லூர் ஆகிய இடங்களில் தை மாதம் முதல் தேதி தொடங்கி மூன்று நாட்கள் விமர்சையாக நடைபெற உள்ளது.

இதன்படி, வருகின்ற 14ஆம் தேதி பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும் 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தொடக்கப் பணிகளுக்காக முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி அலங்காநல்லூர் முத்தாலம்மன் கோவில் முன்பு நடைபெற்றது .

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு நடைபெற்றது. தொடர்ந்து, பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பாக முகூர்த்தக்கால் நடப்பட்டது.

இதில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெங்கடேசன் எம். எல். ஏ. மற்றும் அரசு அதிகாரிகள் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர், பேசிய அமைச்சர் மூர்த்தி: மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஆன்லைன் முறையில் 900 காளைகளும், 800 வீரர்களும் முன்பதிவு செய்யப்படும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளை
களுக்கு, தமிழக அரசு சார்பில் பரிசுகள் வழங்கப்படாது. நன்கொடையாளர்கள் மூலமே பரிசுகள் வழங்கப்படும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *