
மறைமலை நகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி அம்மன் திருக்கோவிலில் மார்கழி மாத இசை விழா.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஸ்ரீ நாகவல்லி அம்மன் கோவில் 15 ஆம் ஆண்டு இசை விழா. இந்த விழாவில் மறைமலைநகரை சுற்றியுள்ள இசை பள்ளி மாணவி மாணவர்கள் சுமார் 50 பேர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். மேலும் இசை நிகழ்ச்சி பங்கு பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மென்மேலும் ஊக்கு விற்பதற்காக சான்றிதழ்கள் ரோட்டரி சங்கம் மற்றும் இன்னர்வீல் சங்கம் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி சங்க சேர்மன் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மற்றும் ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ் குமார், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த மார்கழி மாத இசை நிகழ்ச்சி இக்கோவிலில் 15 ஆண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.