
பழனியில் மறைவுற்ற வழக்கறிஞர் குடும்பத்தினருக்கு சேமநலநிதி 10 லட்சம் வழங்கினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக பழனி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞராக பணி செய்து வந்த ராஜா என்ற வழக்கறிஞர் உடல் நலம் குறைவால் சமீபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக மறைந்த வழக்கறிஞர் ராஜாவின் நினைவாக அவரது குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில் சேமநலநிதி
10 லட்சம் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பழனி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அங்கு ராஜ் செயலாளர் கலைஎழில்வாணன் பொருளாளர்
பச்சை முத்து துணை தலைவர் பால்சாமி
இணை செயலாளர் தண்டபாணி தணிக்கையாளர் கார்த்திகா நூலகர் திலோத்தமா மற்றும் பழனி வழக்கறிஞர்கள் சங்கத்தின் மூத்த வழக்கறிஞர்களான ராஜமாணிக்கம், ராஜேந்திரன் செல்லத்துரை, இக்பால், வெங்கட்ராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வழக்கறிஞரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் விதமாக சேமநலநிதி வழங்கினர்.
தொடர்ந்து நிதியைப் பெற்று கொண்ட வழக்கறிஞர் குடும்பத்தினர் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் கைகூப்பி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
மேலும் மறைவுற்ற வழக்கறிஞர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொருவருக்கும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கம் சார்பாக சேம நலநிதி வழங்கி வரும் செயலினை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்…






