
பழனியில் போதை மற்றும் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு மாராத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போதை மற்றும் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு மாராத்தான் போட்டி நடைபெற்றது.

பழனியை சேர்ந்த தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இணைந்து நடத்திய மாராத்தான் போட்டியை பழனி காவல்துறை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பெரியவர்கள், சிறியவர்கள் என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியானது பழனியாண்டவர் ஆண்கள் கலைக் கல்லூரியில் இருந்து துவங்கி கோவை புறவழிச் சாலை வரை நடைபெற்றது.

பெரியவர்களுக்கு 12 கிலோமீட்டர் தூரமும், சிறியவர்களுக்கு ஐந்து கிலோமீட்டர் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரியவர்கள் சிறியவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக போதை பொருட்கள் மற்றும் புகைகளை பொருட்களினால் ஏற்படும் தீங்குகள் குறித்து போட்டியாளர்களிடையே எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ரவிசங்கர் மற்றும் பழனி நகர முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். Arimugathirai Cultural And Brand Event விழா ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

பழனி நிருபர் நா.ராஜாமணி. 8973350663.






