March 2, 2026
வருஷாபிஷேக விழா:

வருஷாபிஷேக விழா:

அலங்காநல்லூர்,டிச:11.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், சந்தைமேடு பகுதியில் அமைந்துள்ள சந்ததம் ஸ்ரீபால் சுவாமி சித்தர் சிவன் கோவில் வருஷாபிஷே விழா மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது.

இந்த சிறப்பு யாகசாலை பூஜையில், சிவபெருமானுக்கு பல்வேறு ஹோமங்கள், சிறப்பு அபிஷேகங்கள் அர்ச்சனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, 108 வலம்புரி சங்குகளில் சிறப்பு அபிஷேகம், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.

பின்னர், அழகர்கோவில், ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய காலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் சிவபெருமான் மீது, மண்டல அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர், சுவாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

ஏற்பாடுகளை, சந்ததம் பால்சுவாமிகள் மடாலயம் வகையறா பங்காளிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *