
ஸம்ஸ்க்ருத பாரதி மதுரை விபாக் சார்பில் “ஒரு நாள் ஸம்ஸ்க்ருத பயிற்சி வகுப்பு மற்றும் பகவத்கீதா ஜெயந்தி விழா”
மதுரை, நவம்பர் : 29
ஸம்ஸ்க்ருத பாரதி மதுரை விபாக் சார்பில் “ஒரு நாள் ஸம்ஸ்க்ருத பயிற்சி வகுப்பு மற்றும் பகவத்கீதா ஜெயந்தி விழா” நாளை (30.11.2025) நடைபெற உள்ளது. சேதுபதி பள்ளி, வடக்குவெளி வீதி, மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வகுப்பில் இடம்பெறும் முக்கிய பயிற்சிகள்:
ஸம்ஸ்க்ருத பேச்சுப் பயிற்சி
பகவத்கீதா பாராயணம்
அடிப்படை இலக்கணப் பயிற்சி
ஸம்ஸ்க்ருத ஸ்லோகம் மற்றும் பாடல் பாட்டு பயிற்சி
தொடக்க நிலை பயில்வோருக்கான மொழி பயிற்சிகள்
ஸம்ஸ்க்ருதம் முற்றிலும் அறியாதவர்களும் எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 13 முதல் 65 வயதுவரை எல்லோருக்கும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மதிய உணவு வழங்கப்பட உள்ளது. முன்பதிவு அவசியம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்பு எண்: 94884 37493 இத்தகவல் ராமேஸ்வரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் ஸம்ஸ்கிருத பாரதி மு.செந்தில் தெரிவித்தார்






