
CCTV கேமராக்களை பார்த்து ஆய்வு செய்து நகை திருடனை பிடித்த காவல்துறை.
மதுரை இருப்புப் பாதை காவல் உட்கோட்டம் எல்லைக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் நடைமேடை கடைசி பகுதியில் இரவு 8 மணிக்கு பெண்மணி ஒருவர் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும்போது அவரை பின்தொடர்ந்து வந்து அவரது கண்களில் மிளகாய் பொடியை தூவி அவர் அணிந்திருந்த நான்கு பவுன் தங்கச் செயினை அத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டான்.
மதுரை இருப்புப் பாதை காவல் நிலைய குற்ற எண் 454/25 U/S 309(4)BNS வழக்கு பதிவு செய்யப்பட்டு உயர்திரு திருச்சி இருப்புப் பாதை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஐயா ராஜன் IPS அவர்களின் உத்தரவின்படி மதுரை இருப்புப் பாதை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி காமாட்சி அம்மா அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திருமதி ஜெயப்பிரீட்டா அவர்கள் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு செல்லப்பாண்டி மற்றும் காவலர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த காவலர்கள் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு 80க்கு மேற்பட்ட CCTV கேமராக்களை பார்த்து ஆய்வு செய்ததில் இவ் வழக்கில் சம்பந்தப்பட்ட கருப்பசாமி 33/25 S/O ராசு 1/43 ராமானுஜம் நகர், நிலையூர் திருப்பரங்குன்றம் மதுரை மாவட்டம் என்பவனை உறுதிப்படுத்தப்பட்டு எதிரியை கைது செய்து மேற்படி வழக்கின் சொத்தை மீட்கப்பட்டு எதிரியை மதுரை மாவட்ட நீதிமன்றம்JM 6 முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.






