
காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜே.ஆர்.சி தொடக்கவிழா நடைபெற்றது.
காரத்தொழுவு, நவம்பர் : 27.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்கள் சுமார் 800 பேர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இந்த வருடம் புதிதாக ஜே.ஆர்.சி ( ஜுனியர் ரெட் கிராஸ் ) மாணவர்களுக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை தாங்கி நடத்தினார். JRC ஒருங்கிணைப்பாளர் சையது முகமது குலாம் தஸ்தஹீர் வரவேற்புரை ஆற்றினார்.
ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் சமூக சேவை, மனிதநேயம் அதன் தனித்தன்மைகள் பற்றி மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் எடுத்துரைத்தார். பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் திருமலைசாமி, நாகவேணி, இடைநிலை ஆசிரியர் கார்த்திகேயன், சிவராஜ், உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.எம்.முபாரக் அலி மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் நந்தினி , ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவில் கடந்த வருடம் சிறப்பாக செயலாற்றிய ஜே.ஆர்.சி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவின் முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஜெய்சிங் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஜே.ஆர்.சி இணை ஒருங்கிணைப்பாளர் ஆங்கில ஆசிரியர் கார்த்திகேயன் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.






