March 2, 2026
தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடுமலையில் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து நாட்டைக் காப்போம்.. மக்களை காப்போம் என அனைத்துத் தொழிற்சங்கங்கள் விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற நாடுதழுவிய ஆர்ப்பாட்டம்.

உடுமலைப்பேட்டை, நவம்பர் : 26

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து நாட்டைக் காப்போம், மக்களைக்காப்போம் என அனைத்து தொழிற்சங்கங்கள் விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் 26.11.25 இன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு CIDU திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஜெகதீசன் தலைமையில்,
CTC வே.விஸ்வநாதன் முன்னிலையில், கோரிக்கைகளை விளக்கி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் கி.கனகராஜ் , தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் தோழர் ஏ.பாலதண்டபாணி, LPF நாகமாணிக்கம், சதீஸ்குமார், ஏஐடியுசி நிர்வாகி V.சௌந்தர்ராஜ், விவசாய சங்கம் சி.சுப்ரமணியம் தவிதொச நந்தகோபால்,
மற்றும் INDUC கந்தசாமி, HMS சுப்ரமணி, MLFஈஸ்வரன் உட்பட சங்கங்களின் நிர்வாகிகள் உரையாற்றினர். நிறைவாக அஇவிதொச மாவட்டச்செயலாளர் A.பஞ்சலிங்கம் நன்றி தெரிவித்தார்.

44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டத் தொகுப்பாக மாற்றியதை திரும்ப பெறவேண்டும்.
போராடி பெற்ற உரிமைகளை பாதுகாக்க வேண்டும். தொழிலாளர்க்கு குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

விவசாய விளைபொருளுக்கு கட்டுபடியான விலையை உறுதி செய்ய வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வேலை நாளை 200 நாளாக உயர்த்த வேண்டும். எஸ்.ஐ.ஆர் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கைவிட வேண்டும். அனைவருக்கும் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டும்.

கல்விக்கான தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும். பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். பொது துறைகளை பாதுகாக்க வேண்டும். அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சங்கங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *