March 2, 2026
சோழவந்தானில் பெய்த மழையால் சாலைகளில் தேங்கிய மழைநீர்: போதிய வடிகால் வசதி செய்யாததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி.. மழைநீரில் கழிவு நீர் கலந்து செல்வதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம்..!

சோழவந்தானில் பெய்த மழையால் சாலைகளில் தேங்கிய மழைநீர்: போதிய வடிகால் வசதி செய்யாததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதி.. மழைநீரில் கழிவு நீர் கலந்து செல்வதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம்..!

சோழவந்தான்:

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

சோழவந்தானில் கடந்த அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் முறையாக வடிகால் வசதி செய்யாத நிலையில் மழை நீரில் கழிவு நீர் கலந்து சாலைகளில் ஆறாக ஓடுகிறது.

இதன் காரணமாக இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் போன்றவற்றில் செல்பவர்கள் சிறு வியாபாரிகள் தெருவோர கடை நடத்துபவர்கள் உள்ளிட்ட பலர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

பருவ மழை தொடங்குவதற்கு முன்பு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்காதது சாலைகளில் மழைநீர் தேங்குவதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், மழைநீர் சாலைகளில் தேங்குவதால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

மேலும் கழிவுநீர் மழை நீரில் கலந்து செல்வதால் பொதுமக்களுக்கு இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆகையால், போர்க்கால அடிப்படையில் தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற போதிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் ஆனது, சோழவந்தான் மாரியம்மன் கோயில், காமராஜர் சிலை பகுதிகளில் போதிய வடிகால் வசதி அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *