March 2, 2026
அமாவாசை, கோயில்களில் அனுமன் வழிபாடு:

அமாவாசை, கோயில்களில் அனுமன் வழிபாடு:

மதுரை;

மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில், அமாவாசையை ஒட்டி, ஆஞ்சநேயருக்கு பக்தர்களால், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக மதுரை தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் காலை பக்தர்கள் பலர் முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர். மாலையில் அனுமனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மதுரை வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து வழிபட்டனர்.

மதுரை தாசில்தார் நகர் வரசித்தி விநாயகர், சித்தி விநாயகர், கோமதிபுரம் ஞான சித்தி விநாயகர் ஆலயம், சர்வேஸ்வர ஆலயத்தில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சணைகள் நடைபெற்றது. மதுரை அருகே விசாக நட்சத்திர விளங்கும் சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், முன்னோர்களுக்கு கோயில் வாசலில் மோட்ச தீபம் ஏற்றி சிவனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை , ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *