
சிறப்பான வரவேற்பு...
மதுரை:
14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பை இன்று ( 14.11.2025) மதுரை மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளதையொட்டி மதுரை – சிவகங்கை சாலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், 300-க்கும் மேற்பட்ட மதுரை நாராயணா பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், வரவேற்பு நடனம், அணிவகுப்பு மரியாதை போன்ற நிகழ்ச்சிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் முதல் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பை சுற்றுப்பயணத்தை தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் ,அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் ,மாநகர காவல் ஆணையாளர் முனைவர்.ஜெ.லோகனாதன், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், ,காவல் கண்காணிப்பாளர் கா.பஅரவிந்த்,
,மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் , மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.






