March 2, 2026
காரத்தொழுவு: அரசு மேல்நிலைப் பள்ளியில் உணவு திருவிழா..

காரத்தொழுவு: அரசு மேல்நிலைப் பள்ளியில் உணவு திருவிழா..

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் அருகே அமைந்துள்ள காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 750 க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் இப்பள்ளியில் உணவு திருவிழா நடைபெறுவது வழக்கம் அதேபோல் இன்றும் 5/11/25 அன்று உணவுத் திருவிழா நெருப்பில்லா சமையல் என்ற பிரிவில் நடைபெற்றது பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை தாங்கி நடத்தினார்.

மேலும் அவர் பள்ளி மாணவர்களுக்கு உணவின் அவசியம் பற்றியும் உடல் ஆரோக்கியம் பற்றியும் எடுத்துரைத்தார் இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தங்களது படைப்புகளாக, காய்கறிகள், பழங்கள், தானியங்கள், திணை வகைகள் போன்ற பொருட்களை பயன்படுத்தி தங்கள் படைப்புகளை கொண்டு வந்திருந்தனர்.

இவ்விழாவின் நோக்கம் நம் தமிழகத்தின் பாரம்பரிய பண்பாடு, உணவு கலாச்சாரத்தை பெருமைப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது தலை வாழை இலையில் தங்களுடைய படைப்புகளை மாணவர்கள் கொண்டு வந்திருந்தனர்.

இப்படைப்புகளை பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள், மற்றும் மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர் முதல் மூன்று இடங்களை பிடித்த குழு மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழாவின் முடிவில் பள்ளியின் உதவி ஆசிரியர் சையது முகமது குலாம் தஸ்தகிர் நன்றியுரை வழங்கினார், விழாவிற்கான ஏற்பாடுகளை JRC பொறுப்பாளர் கார்த்திகேயன் ஆசிரியர் செய்திருந்தார்.

அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *