March 2, 2026
பழனியில் காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

பழனியில் காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை முன்பு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு .உலகளவில் எத்தனையோ பெண்கள் அரசியலில் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் இந்திரா காந்தி என்று சொன்னால் மிகையாகாது.

தேசப்பற்று, சேவை, தைரியம், வீரம் என அனைத்தையும் ஒருசேர தனக்குள் கலவையாக கொண்டு செயல்பட்டவர் அவர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரின் மகளாக இருந்தாலும் தனது தனித்திறமை மற்றும் அசாத்தியமான செயல்பாடுகளால் நாட்டு மக்களிடையே நன்கு அறியப்பட்டவர்.

இவர் பிரதமராக பதவி வகித்த காலங்களில் ஒட்டுமொத்த இந்தியாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இந்தியாவின் ‘இரும்பு பெண்மணி’ என்ற பெயரை பெற்றார்.

அவரின் திரு உருவ படத்திற்கு காங்கிரஸ் கமிட்டியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் பழனி நகரத் தலைவர் மாரிக்கண்ணு தலைமையில் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர் .

நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் மாசிலாமணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் நகரத் துணைத் தலைவர் கணேசன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை. காஞ்சி கதிரேசன் நகரச் செயலாளர் கணேசன் வார்டு பொதுச் செயலாளர் பழனிச்சாமி மாவட்டத் துணைத் தலைவர் நாகராஜன் மாவட்ட துணை தலைவர் முருகானந்தம் முத்துகிருஷ்ணன் தாளாளர் நஸ்ருதீன் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *