February 26, 2026
கடைசி வரை தேவரின் கேள்விக்கு பதில் சொல்லாத காஞ்சி பெரியவர்...

கடைசி வரை தேவரின் கேள்விக்கு பதில் சொல்லாத காஞ்சி பெரியவர்...

ஐயா பசும்பொன் தேவர் திருமகனார் ஒருமுறை.. காஞ்சி பெரியவராக இருந்தவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.. வணக்கம் பெரியவரே.. தாங்களை சந்திக்க வரும் என் சாதி மக்களை தரையில் உட்கார வைத்துவிட்டு நீங்கள் சோபாவில் அமருவது நியாயமா..? எங்கள் மக்களும் இந்துக்கள் தானே அவர்கள் குற்றப்பரம்பரை என முத்திரை குத்தப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கிறார்கள்.. சொல்லவொண்ணா தாங்கவொண்ணா கொடுமைகளை அனுபவிக்கிறார்கள்..

சக இந்துக்களான என் மக்கள் குறித்து நீங்கள் ஏன் வாய் திறப்பதில்லை.. இன்னும் பல கோயில்களில் என் மக்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்படுகின்றனவே அது குறித்து நீவிர் ஏதாவது போராடியுள்ளீர்களா…? எந்த பெரிய கோவிலிலாவது (எங்கள் சாதியாருக்கு சொந்தமான கோவில்கள் தவிர்த்து) முக்குலத்தோர் எவனாவது சாமியின் கருவரைக்கு செல்ல முடியமா..? நாட்டுக்காக பல முறை போராடி செத்த எம் மறக்கூட்டத்தைவிட எம்முறையில் கடவுளுக்கு நீங்கள் நெருக்கமானவர் ஆனீர்..? என் கேள்வி எதற்காவது பதில் சொல்லும் திராணி உங்கள் பிராமண சமூகத்தில் எவனுக்காவது உண்டா…?

இறுதியாக தேவர் உரையை இவ்வாறு முடிக்கிறார்.. ஓட்டுக் கிடைக்கிறது என்றால் நாளை இந்த ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என் சிலைக்கு மாலை அணிவித்து என் மக்களின் வாக்குகளை அபகரிக்க நினைப்பார்கள்… நாம் குற்றப்பரம்பரை ஆக்கப்பட்டபோது போராடாத பிராமணர்களை நம்மை விட உயர்ந்தவர்கள் எனக் கருதி அவர்களுக்கு ஜால்ரா அடிப்பது நம் சமுதாயத்திற்கு நாம் செய்யும் துரோகம்…

நாள்: 17 செப்டம்பர் 1956
இடம்: பெருநாழி கிராமம் (இராமநாதபுரம் மாவட்டம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *