March 2, 2026
பழனியில் S.I.R (SPECIAL INTENSIVE REVISION) சிறப்பு தீவிர திருத்த BLA-2 விளக்க கூட்டம் தோல்வி!?.

பழனியில் S.I.R (SPECIAL INTENSIVE REVISION) சிறப்பு தீவிர திருத்த BLA-2 விளக்க கூட்டம் தோல்வி!?.

திண்டுகல் மாவட்டம் பழனி தனியார் மஹாலில்நடைபெற்ற S.I.R (SPECIAL INTENSIVE REVISION) சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான (BLA-2) பயிற்சி 01.11.2025 காலை 12.00 மணிக்கு தொடங்கிய கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே தோல்வியில் முடிந்தது.

அனைத்து கட்சி BLA-2 கள், நிர்வாகிகள் என 500 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டநிலையில் நிகழ்ச்சி துவங்கிய பொழுது அங்கு ஒலி மற்றும் விளக்க திரை முதலியன முறையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய தவறியதால் நிகழ்ச்சி பாதியிலே தடைபட்டது.

அதனடிப்படையில் நிகழ்வு சலசலபிற்கு பின்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது BLA-2 நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் சமாளித்தனர்.

#SIR #Govermentofficers #BLA-2 #2026 #2026election #palani #DMK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *