March 2, 2026
உசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தி விழா.

உசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தி விழா.

உசிலம்பட்டி:

உசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேமுதிக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேவர் ஜெயந்தி முன்னிட்டு இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழாவும் 118 வது ஜெயந்தி விழாவும் கொண்டாடப்படு வருகிறது. இந்நிலையில்,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.கே. மூக்கையாத் தேவர் திருவுருவ முழு வெண்கல சிலைகளுக்கு தேமுதிக சார்பில்,
மதுரை மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், மாவட்ட விவசாய அணி செயலாளர் கருமாத்தூர் பாண்டி, நகரச் செயலாளர் அசோகன், ஒன்றிய செயலாளர் சமுத்திரபாண்டி, மாவட்டத் துணைச் செயலாளர் சுரேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் வில்லாணி செல்வம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வாசகராஜா, தொட்டப்பநாயக்கணூர் கிளைச் செயலாளர் போத்திராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *