
மாநகராட்சிப் பள்ளியில் ஆங்கில இலக்கிய விழா
திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி டவுன் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி (கல்லணை) பள்ளி ஆங்கில துறை சார்பாக இலக்கியத் திருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.கனியம்மாள் தலைமை தாங்கினார்
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு சிவகுமார் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி சாய் சுப்புலட்சுமி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் டாக்டர் கோல்டா மற்றும் ஆங்கில பேராசிரியர் டாக்டர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்
ஆங்கில மொழியில் மாணவர்களின் ஆர்வத்தின்னையும் பேச்சாற்றலையும் வளர்க்கும் விதமாக பல்வேறு விதமான படைப்புகள் மாதிரிகள் ஆங்கில கவிஞர்கள் எழுத்தாளர்கள் பள்ளி மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆங்கில ஆசிரியர்கள் செய்திருந்தனர்






