March 2, 2026
பழனியில் கந்தசஷ்டி விரதம் கடைபிடித்து வந்த பக்தர்கள் தண்டு விரதம் மேற்கொண்டனர். தொடர்ந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழனியில் கந்தசஷ்டி விரதம் கடைபிடித்து வந்த பக்தர்கள் தண்டு விரதம் மேற்கொண்டனர். தொடர்ந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழனி, அக்டோபர் : 28

பழனியில் கந்தசஷ்டி விரதம் கடைபிடித்துவந்த பக்தர்கள் தண்டு விரதம் மேற்கொண்டனர். தொடர்ந்து இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் விமர்சையாக நடைபெறக்கூடிய திருவிழாக்களில் ஒன்று கந்தசஷ்டி திருவிழா. கந்தசஷ்டி திருவிழா கடந்த 22ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

தொடர்ந்து 6ம் நாளான இன்று மாலை மலையடிவாரத்தில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், நாளை திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. காப்பு கட்டுதலுடன் தொடங்கி கடந்த 6நாட்களாக உணவு அருந்தாமல் சஷ்டி விரதம் கடைபிடித்து வந்த பக்தர்கள் இன்று வாழைத்தண்டு விரதம் மேற்கொண்டனர்.

சூரசம்காரம் நடைபெறக்கூடிய இன்றைய தினத்தில் பக்தர்கள் வாழைத்தண்டு, பழ வகைகளை, தயிருடன் கலந்து முருகனுக்கு படையலிட்டு வழிபாடு செய்து, வாழைத்தண்டு உண்டும், கருப்பட்டி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சத்து மிகுந்த பானகம் ஆகியவற்றை அருந்தி விரதம் கடைபிடித்து வருகின்றனர்.

மலையடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தண்டு விரதம் மேற் கொள்வதற்காக குவிந்துள்ளனர். நாளை நடைபெறக்கூடிய திருக்கல்யாண நிகழ்ச்சி முடிவடைந்ததும் முருகனுக்கு அறுசுவை உணவு படைத்து, பக்தர்களும் ஏழு நாட்களுக்கு பிறகு உணவு உண்டு தங்களது கந்தசஷ்டி விரதத்தை முடித்துக் கொள்கின்றனர்.

மாலை பழனி அடிவாரம் கிரிவீதியில் நடைபெறக் கூடிய சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ.சரவணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, பழனி கோட்டாட்சியர், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முருக பக்தர்கள் அரோகரா அரோகரா என கோஷங்கள் எழுப்பியவாறு முருகனை வழிபட்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன், காவல் ஆய்வாளர் மணிமாறன், காவல் துணை ஆய்வாளர் விஜய், பழனி சுற்றுவட்டார காவல்துறையினர் என நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *