
மதுரை மாநகராட்சி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் அங்கன்வாடி மையத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மதுரை.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.61 அன்சாரி நகர் பகுதியில் மத்திய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
மதுரை மாநகராட்சி மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டலம் 3 வார்டு எண்.61 அன்சாரி நகர் பகுதியில் மத்திய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை, அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.

தொடர்ந்து, அமைச்சர், அன்சாரி நகர், மகபூப்பாளையம் உள்ளிட்ட வார்டு எண்.61 க்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சாலை, குடிநீர் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித் தொகை வேண்டி அப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி ஆணையாளர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் முத்து, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர் செல்வி, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






