
அண்ணாமலை எனும் ஆளுமை ஐபிஎஸ் முதல் அரசியல் வரை தேசியத்தின் பாதையில் தமிழகம் பெருமை கொள்ளும் அரசியலில் அறிய பொக்கிஷம்
ஐபிஎஸ் அண்ணாமலை அவர்கள் நேர்மையும் துணிச்சலும் மிகுந்த ஆற்றல் மிக்க தலைவர் இந்திய காவல் துறையின் ஒளிரும் நாயகனாக திகழ்ந்தவர், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திரு. அண்ணாமலை. காவல் துறையில் பணியாற்றிய காலத்தில் சட்டம், ஒழுங்கு, பொதுமக்கள் நலன் என்பவற்றை முன்னிலைப்படுத்தி, அச்சமின்றி, நேர்மையாக செயல்பட்டவர் மக்களின் பிரச்சனைகளைக் கவனித்து, உடனடி தீர்வு வழங்கியவர் என்ற பெருமையைப் பெருள்ளவாவர். மக்களின் பாதுகாப்புக்காக அயராது உழைத்தாவர்.

தனது திடமான முடிவுகள், தெளிவான பேச்சு, நேர்மையான நடத்தை ஆகியவற்றால் “சிங்கம்” என்ற பெயரால் பொதுமக்களால் அழைக்கப்பட்டார் சாதாரண மக்களின் உரிமைகள் காக்கப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிற்க வேண்டும் என்ற மனப்பான்மையை எப்போதும் வெளிப்படுத்தியவர். இன்று அரசியல் மற்றும் சமூக அரங்கிலும் உறுதியான குரலாக, மக்களின் நலனுக்காகப் போராடி வருகிறார்.
ஐபிஎஸ் அண்ணாமலை நேர்மைக்கும் துணிச்சலுக்கும் ஓர் அடையாளம்
அண்ணாமலை அவர்களின் பேச்சு தெளிவும், உண்மையும், துணிவும் கொண்டது. எந்த சூழலிலும் அஞ்சாமல் உண்மையைச் சொல்வதாலும், சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வதாலும், அவர் மக்களின் மனதில் ஒரு வலுவான இடத்தை பிடித்தவர்.
ஐபிஎஸ் அதிகாரி, மக்கள் சேவகர், அரசியல் தலைவர் இந்த மூன்றிலும் அண்ணாமலை அவர்கள் ஒரு நேர்மையான, துணிவான முகமாகத் திகழ்கிறார். இளைஞர்களுக்கு முன்மாதிரியாகவும், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் குரலாகவும், அவர் தொடர்ந்தும் தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் தளங்களில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
அண்ணாமலை அவர்கள் மக்களின் நலனுக்காக தன்னலமின்றி உழைக்கும் தலைமைப் பொறுப்புடைய ஆளுமையாக திகழ்கிறார். சமூகத்தின் ஒவ்வொரு தரப்பினரின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும் நோக்கோடு, பொதுநலனுக்காக தீர்வுகளை உருவாக்கும் நம்பிக்கைக்குரிய தலைவராக அண்ணாமலை அவர்கள் உருவெடுத்துள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் அண்ணாமலை தனித்துவமான தலைவர்
தமிழக அரசியலில் பல தலைமுறைகளாக பல்வேறு தலைவர்கள் அரசியலில் இருந்துள்ளனர் ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் பாரதிய ஜனதா கட்சியில் அண்ணாமலை அவர்கள் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். “அண்ணாமலை போன்று ஒரு துடிப்பான தலைவர் தமிழகத்தில் இருந்ததில்லை என்ற கூற்றை மக்கள் பலரும் வலியுறுத்துவதற்குக் காரணம், அவரது குணநலன்கள், அர்ப்பணிப்பு, மற்றும் செயல்பாடுகளே
நேர்மை மற்றும் தன்னம்பிக்கை அண்ணாமலை அரசியல் பேச்சுகளில் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பேசுகிறார். சிக்கலான கேள்விகளுக்கும் பயமின்றி பதில் அளிக்கிறார். ஊழலுக்கு எதிரான அவரது நிலைப்பாடு மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது.
அரசியலில் சாதாரணமாக காணப்படும் போலித் தன்மைக்கு இடமில்லாமல் அவர் வெளிப்படையாக செயல்படுவது, இளம் தலைமுறையை ஈர்க்கிறது இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு குறைந்து வரும் சூழலில், அண்ணாமலை அவர்களின் குரல் பல இளைஞர்களை தீவிரமாக அரசியலுக்கு ஈர்த்துள்ளது. அரசியலில் நேர்மையும் உண்மையும் சேவையும் இருக்க வேண்டும்” என்ற அவரது வாக்குறுதி, இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.
அண்ணாமலை அரசியலில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறார். தமிழகத்தில் ஆட்சியிலும் இல்லை, பெரிய அரசியல் குடும்பத்தில் இருந்தும் வரவில்லை என்ற நிலையிலும், தனது திறமையாலும் உழைப்பாலும் மக்கள் மத்தியில் அசைக்க முடியாத பெரும் செல்வாக்கை பெற்று விட்டார் அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு ரசிகர்களாக மாறிவிட்டனர் ஒரு கட்சியின் தலைவரை மாற்று கட்சியினரும் கூட நேசிக்கும் அளவுக்கு அண்ணாமலை அவர்களின் செயல்பாடு இருந்தது தமிழகத்தில் அண்ணாமலைக்கு அவர்களுக்கு என்று பெரும் செல்வாக்கும் மக்கள் மத்தியில் பெருகி வருகிறது
அரசியல் எதிர்ப்புகளின் மத்தியில் கூட தன்னுடைய நோக்கத்தை மாற்றாமல் உறுதியாக நிற்கும் ஆளுமை அவர் அண்ணாமலை அவர்கள் பெயரில் மட்டும் சிங்கம் அல்ல நிஜ வாழ்விலும் கர்ஜிக்கும் சிங்கமே
அண்ணாமலை அவர்கள் கொண்டு வந்திருக்கும் அரசியல் பாணி, தமிழகத்தில் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குகிறது
பொதுவாக குடும்ப அரசியல், சாதி சார்ந்த அரசியல் என்பவை தமிழகத்தில் அதிகமாக காணப்பட்டுள்ளன. குடும்ப அரசியலை சார்ந்து இல்லாமல் தனித்து மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை உண்டாக்கி அரசியலை மாற்ற முயற்சிப்பது அவரது மிகப் பெரிய பங்களிப்பாகும்.
தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் அண்ணாமலை அவர்கள் ஒரே ஒரு அத்தியாயமாக இல்லாமல், தனி புத்தகமாக திகழ்கிறார் அவரின் நேர்மை, தைரியம், மக்கள் பணி மீது கொண்ட அக்கறை ஆகியவை அவரை சாதாரண தலைவரல்லாமல், வரலாற்றில் தனித்துவமான தலைவராக மாற்றியுள்ளன அதனால் தான் பலரும் உறுதியாகக் கூறுகிறார்கள்: அண்ணாமலை போன்ற தலைவர்கள் கிடைப்பது அரிதினும் அரிது”அண்ணாமலை போன்ற நேர்மையுள்ள படித்த திறமை மிக்க தலைவர் இருந்தது இல்லை என்று
மக்கள் மனதை கவர்ந்த “என் மண் என் மக்கள்” யாத்திரை தன்னிச்சையான மக்கள்கூட்டம் உற்சாகம் ஊட்டியது மாநிலம் முழுவதும் மக்களின் பேராதரவில் நடைபெற்ற “என் மண் என் மக்கள்” யாத்திரை மிகுந்த வெற்றியுடன் நிறைவு பெற்றது.
அண்ணாமலை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த யாத்திரை, ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களின் தன்னிச்சையான வரவேற்பால் சிறப்பாக அமைந்தது.
நாட்டுப்பற்று, நேர்மை, நம்பிக்கை எனும் மூன்று கோட்பாடுகளை மக்களிடையே ஊட்டியது.
இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் தாமாகவே முன்வந்து பங்கேற்று உற்சாகமாக கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஊரிலும் மக்கள் பெருக்கம் அலைமோத, யாத்திரை உற்சாகக் களமாக மாறியது.
பெரும் வெப்பம், மழை என எத்தகைய சூழலிலும் மக்கள் ஆர்வம் குறையாமல் தொடர்ந்தது.
அண்ணாமலை அவர்களின் உரைகள் மக்களின் மனதைத் தொட்டு விழிப்புணர்வை உண்டாக்கியது மாற்றத்திற்கான அரசியல் என பல அரசியல் விமர்சனகர்கள் கூறினார்கள் இன்று தமிழகத்தின் வலிமையான மக்களின் நம்பிக்கை யாத்திரையாக உருவெடுத்த “என் மண் என் மக்கள்” நிகழ்வு, தமிழக அரசியலில் புதிய திருப்புமுனையை மாறியது இன்று தமிழகத்தின் வலிமையான கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உருவெடுத்துள்ளது
மாநிலத் தலைவராக இருந்தபோது 60 ஆண்டு வலிமை கொண்ட திராவிட முன்னேற்ற கழகத்தை சவாலுக்கு உட்படுத்திய தலைவர்
தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் அண்ணாமலை சுமார் 60 ஆண்டுகளாக வலுவான கட்டமைப்பு, அனுபவம், மற்றும் நிலைபெற்ற கட்சித் தலைமையுடன் இயங்கிவரும் திமுகவையே குறுகிய காலத்தில் திணறச் செய்த தலைவராக அண்ணாமலை திகழ்கிறார்.
அண்ணாமலை மாநில அரசை நேருக்கு நேர் எதிர்கொண்டு, அரசியல் விவாதங்களையும் பொது மக்களிடையே பாஜக கட்சியின் குரலையும் வலுப்படுத்தும் விதத்தில் முன்னெடுத்த நடவடிக்கைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது
மாநிலத் தலைவராக இருந்த போது அண்ணாமலை பல்வேறு விவகாரங்களில் திமுக அரசை நேரடியாகச் சவால் செய்ததுடன், ஊழல், நிர்வாகத் தவறுகள், மற்றும் பொதுமக்கள் நலனில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து வெளிப்படையாகக் கேள்வி எழுப்பினார். அவரது உரைகள், ஆவணங்கள், மற்றும் சமூக ஊடகங்களில் அண்ணாமலை அவர்களால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் அரசியல் சூழலை விறுவிறுப்பாகியது திமுகவினரை கலங்கடித்தது.
அவரது துணிச்சலான நடவடிக்கை மற்றும் தைரியமான பேச்சு காரணமாக, திமுகவின் மூத்த அமைச்சர்கள் கூட அண்ணாமலை பற்றி பொதுவாகக் கருத்து தெரிவிப்பதை தவிர்த்து வந்தனர். அண்ணாமலை பேசினால் அரசியல் விவாதம் புதிய வேகம் எடுக்கிறது என்ற உணர்வே பல அமைச்சர்கள் வெளிப்படையாக பேசுவதையே தவிர்த்து வந்தனர் சில காலம்.
அவர் அரசியலை மக்களிடம் நேரடியாக கொண்டு சென்ற விதம் நகரங்களிலும், கிராமங்களிலும், அனைத்திலும் தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை மென்மேலும் உயர்த்தியது அரசியல் எதிரிகளை மட்டுமல்ல, தமது கட்சியினருக்கே கூட புதுப்பித்த ஆற்றலாக இருந்தது
அண்ணாமலை அவர்களின் அரசியல் நடைமுறைகள், ஆளும் கட்சி திமுகவை வலிமையான கூட்டணி அமைப்பை திணறச் செய்தது என்றால் அது மிகையாகாது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தமிழக அரசியலில் அவர் உருவாக்கிய தாக்கம், வரும் தேர்தலில் மிகப் பெரும் வெற்றியைத் தேடித் தரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை
அரசியலில் பல தடைகளை கடந்து அண்ணாமலை
மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசியலில் ஆரம்ப காலத்திலிருந்தே கடுமையான விமர்சனங்களையும், பல்வேறு அவதூறுகளையும் எதிர்கொண்டவர் ஆனால் அவை எதுவும் அவரின் பாதையை தடுக்கவில்லை. மாறாக, அந்த தாக்குதல்களையே தன்னுடைய வளர்ச்சிக்கான படிகளாக மாற்றிக்கொண்டார். இன்றோ, அவற்றின் அனைத்தும் பூமாலைகளாக அவரது கழுத்தை அலங்கரிக்கின்றன. அரசியலில் எவராலும் அடைய முடியாத உயரத்தில் அவர் நிற்பதை நாம் காண்கின்றோம்.
அதேபோல, தமிழக அரசியலிலும் இன்றைக்கு அண்ணாமலை அவர்கள் எதிர்கொள்வது இதேபோன்ற சூழல்தான். அவர்மீது பல்வேறு பொய்யான விமர்சனங்கள் . சில நேரங்களில் திட்டமிட்டு அவதூறுகளும் பரப்பப்படுகின்றன ஆனால் அவற்றை அவர் கடந்து செல்கிறார் பாரத பிரதமர் மோடி அவர்களின் நடைமுறை, அண்ணாமலை அவர்களின் நடைமுறை என வித்தியாசங்கள் இருந்தாலும், ஒரே போன்று இருவரையும் ஒன்றிணைக்கிறது தாக்குதல்கள் அவர்களை பலப்படுத்துகின்றன என்பதே உண்மை
தமிழகத்தின் அரசியல் நிலைமை நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கிறது. மக்கள் மனதில் புதிய நம்பிக்கை மற்றும் மாற்றத்தின் எதிர்பார்ப்பு வேரூன்றி வருகிறது. இந்த சூழலில், அண்ணாமலை அவர்கள் தமிழகத்தின் தேசியமும் தெய்வீகமும் என்ற கொள்கை நோக்கோடு அரசியலில் ஒழுக்கம் நாட்டுப்பற்று, நேர்மை என்பவற்றை உயிராக கொண்டவர் அரசியலில் எந்தவிதமான அழுத்தம் வந்தாலும் விழிப்புணர்வுடன் செயல்படுபவர் மாற்றத்திற்காக ஏங்கும் இளைய தலைமுறைக்கும் தீர்வு தேடும் மக்களுக்கும் அண்ணாமலை அவர்கள் ஒளி வெளிச்சமாக இருக்கிறார் மக்களின் மனதில் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றவர் தமிழகத்தின் வரும் காலங்களில் தலைமைச்சிவிகை மீது அமரும் நேரம் தொலைவில் இல்லை வன்மம் மிகுந்த அரசியலில் நல்வழி செல்பவர்கள் தடைகளை காணலாம் நல்லவர்கள் சில நேரம் தோற்கலாம் ஆனால் வல்லமை கொண்டவர்கள் வலிகளை காண்பார்கள் வல்லவர்கள் தோற்பதில்லை.
செய்தியாளர் : R.மனோஜ் மதுரை : 9698259788






