
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய 37 ஊராட்சிகளில், காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம்..
அலங்காநல்லூர், அக்: 12 –
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு 2.10. 25 அன்று நடைபெற இருந்த கிராமசேவை கூட்டம் 11.10.2025 நேற்று கிராமசபை கூட்டம் இணைய வழி வாயிலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை கலந்து கொண்டு காணொளி வாயிலாக சிறப்பு உரையாற்றினார்.
கல்லணை ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஊராட்சி செயலாளர் ராஜாங்கம் முன்னிலையில், கிராம பொதுமக்கள் மகளிர் குழுக்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஊராட்சி அலுவலகம் பின்புறம் பேவர் பிளாக் அமைப்பது காந்தி கிராமத்தில், கழிவுநீர் வாய்க்கால் அமைப்பது, உப்பலா கஞ்சி மடத்தில் தெருவிளக்கு அமைப்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடுவார்பட்டியில், இதேபோன்று கிராம கூட்டம் நடந்தது. பற்றாளர் ராஜசூர்யா ஒன்றிய மேற்பார்வையாளர் தலைமையிலும் ஊராட்சி செயலாளர் செல்வமூர்த்தி முன்னிலையில்,
மகளிர் குழுக்கள் கிராம பொதுமக்கள் கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், மேல்நிலை நீர் தேக்க தொட்டி தெரு விளக்கு அமைப்பது பேவர் பிளாக் அமைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதே போல், மாணிக்கம்பட்டி ஊராட்சியில், பற்றாளர் மலர்மன்னன் ஊராட்சி செயலாளர் பெருச்சி முன்னிலையில்
நடந்தது.
இதில், குடிநீர் கழிவுநீர் தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதே போன்று, அலங்காநல்லூர் ஒன்றிய 37 கிராம ஊராட்சிகளிலலிலும் கிராம கூட்டங்கள் நடந்தது.






