March 2, 2026
ஆத்தூர் அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி..

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி..

திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் காசநோய் ஒழிப்பு மற்றும் தொற்றாளர் நலக் கூட்டமைப்பு சார்பாக போதிய ஆதரவற்ற பின்தங்கிய நிலையிலுள்ள காசநோய் தொற்றாளர்களுக்கு ஊட்டச்சத்து நல உதவிப் பெட்டகம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், ரீச் தொண்டு நிறுவன பணியாளர் கவின்குமார் வரவேற்புரை
யாற்றினார்.

ஆத்தூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் அரவிந்த் நாராயணன் தலைமை தாங்கினார்.

மருத்துவ அலுவலர் டாக்டர் கெளசிகன், மாவட்ட காசநோய் பிரிவு மருத்துவ அலுவலர் டாக்டர்.சந்திரிபிரியா, சித்தா பிரிவு மருத்துவர். ஷர்மிளா தேவி, சீனியர் ஆய்வக நுட்புநர் ராம்குமார், அச்சாணி தன்னார்வ அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சோ.ராமு, காசநோய் பிரிவு ஜோசப் வில்லிங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயனாளிகளிடையே நம்பிக்கை மைய ஆற்றுநர் கண்ணன் ஊட்டச்சத்து மற்றும் தன்சுத்தம் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்வில், 30 -க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுண்டல், பாசிப்பயிறு, குதிரைவாலி அரிசி உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளடக்கிய நல உதவிப் பெட்டகம் வழங்கப்பட்டது. காசநோய் பிரிவிலிருந்து
மரிய மெரினா, ஜாக்குலின், ஐசிடிசி ஆய்வக நுட்புநர் கௌசல்யா மற்றும் சித்தா பிரிவு நாகலட்சுமி ஆகியோர் நிகழ்விற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்திருந்தனர். காசநோய் பிரிவு கார்த்திகா தேவி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *