
சாலையில் ஆர்டீசியன் ஊற்று...
மதுரை:
மதுரையில் பல்வேறு இடங்களில் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மதுரையில் கோச்சடை 66.வது வார்டில் முத்து நகர், முத்தையா கோயில் எதிர்ப்புறம் சாலையில் கழிவு நீர் பெருக்கெடுத்து குளம் போல தேங்கியுள்ளது.
இவ் வழியாகத்தான் தினசரி பொது மக்கள் சிறு கற்களை சாலையில் வைத்து அதன் மேல் நடந்து செல்லக்கூடிய அவல நிலை ஏற்படுகிறது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், மதுரை அண்ணாநகர் ஆறாவது மெயின் ரோடு கனரா வங்கி அருகேயும், வீரவாஞ்சி தெரு, அன்பு மலர் தெரு, சித்தி விநாயகர் கோயில் தெருக்களில் சாலை அமைத்தும், தெருக்களில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது.
இது குறித்து இப் பகுதி மக்கள் மாநகராட்சி உதவிப் பொறியாளர் களிமண் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வில்லை யாம்.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, ணையாளர் வார்டு கவுன்சிலர்கள் பார்வையிட்டு, இப் பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மதுரையில் பல தெருக்களில், மாநகராட்சி சார்பில் தார்ச் சாலை அமைத்தும், சாலையில் மழைநீர் குளம் போல காட்சி அளிக்கிறதாம்.






