March 2, 2026
கரூர், வேலுசாமிபுரம் படுகொலை.!

கரூர், வேலுசாமிபுரம் படுகொலை.!

கரூர் வேலுசாமிபுரம் படுகொலை சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில்; மறக்க முடியாத துயரமான துக்க நாள்!

ஒரு குடும்பம் தொடர்ந்து தமிழ் நாட்டை- எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி; எதிர்ப்பவர்களை எந்த எல்லைக்கும் சென்று அழித்தொழிக்கும் என்பதற்கு, நிகழ்காலச் சான்று நடிகர் விஜய்!

செப்டம்பர் 27 2025 தமிழ்நாட்டின் கறுப்புத் தினம்; சுதந்திர இந்தியாவின் ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட கொடூரமானவை!

வெட்டி வா என்றால்; கட்டிவரும் இளைஞர் பட்டாளம்- தேனடை தேனீக்களாக நடிகர் விஜயை மொய்த்துக் கிடந்தனர்!

ஸ்டாலினின் ஊழல் குடும்ப ஆதக்கம் ; கலகலத்து சரிந்து கொண்டிருந்தது!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் கட்சி தொடங்கிய பிறகு; ஸ்டாலினின் ஊழல் சாம்ராஜ்யத்தை கிழி கிழி என்று கிழித்திருந்தார்!

விக்கிரவாண்டியில் தொடங்கி அவர் சென்ற இடமெல்லாம்; சினிமா ரசிகர்கள் காட்டாற்று வெள்ளமாய்த் திரண்டனர்!

காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், யு டியூப்கள் ஆகியவற்றில் மனித தலைகள் அலைமோதியதைக் காணாதவர்கள் யாருமில்லை!

ஆனால்- ஸ்டாலின், அவருடைய தலையிலான 32 பொம்மை அமைச்சர்கள் , துருப்பிடித்து கிடக்கும் அரசு இயந்திரம் உணர்ந்திடவோ! அறிந்திடவோ! முடியாமல் ! முடங்கி கிடந்திருக்கலாம்!

தமிழ்நாடு காவல் துறையுமா? நம்ப முடியவில்லை!

விஜய் நடந்தால் பொதுக்கூட்டம்; நின்றால் மாநாடு; பேசினால் கடல் போன்ற ஆரவாரம்!

கட்டுங்காடங்காத 30 வயதுக்கும் கீழ் உள்ள சிங்கக் குருளைகள் ; ஈட்டி முனைக்கும் இமை கொட்டாத இளம் வயதினர்- லட்சம் லட்சமாய் திரள்வது, ஸ்டாலினுக்கு எதிரான மனக்கொதிப்பின் வெளிப்பாடு!

தமிழ் நாட்டில் , தமிழ், தமிழ் இனம் என்று 70 ஆண்டுகளாக; தமிழ் மக்களை சொரண்டிக் கொழுத்துப் பொனது; ஸ்டாலினின் குடும்பம்!

இதைத் தட்டிக் கேட்க முனைந்தவர்களெல்லாம்; தடுமாறினர்!திசை மாறினர்! விலைபேசப்பட்டனர்!

எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆகியோர் மட்டுமே ஸ்டாலின் குடும்பத்தின் ஆதிக்கத்தை தகர்த்து தரைமட்டமாக்கினர்!

இவர்கள் இருவரையும் ஒழித்திட என்னென்ன செய்தார்கள் என்பதை ஒரு கணம் திரும்பிப் பார்த்தால்; வியப்பு மேலிடும்!

ரூ65 கோடி சொத்து குவிப்பு வழக்கு ஜெயலலிதா மீது; ஸ்டாலின் குடும்பத்தின் அரசியல் சதி! சூழ்ச்சி! வஞ்சகம்!

பொதுவெளியில் மக்களைத் திரட்டி அரசுக்கு எதிராக போர் தொடுப்பது; ஜனநாயகம் தந்திருக்கும் உரிமை!

பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை- அரசியலமைப்புச் சாசனம் வழங்கியிருக்கும் சுதந்திரம்!

கொதித்துக் குமுறி நிற்கும் மக்கள் சக்தி கட்டுக்கு அடங்காமல் திரண்டால்; அவர்களை ஒழங்குப்படுத்துவதற்குத்தான் சட்டம்- ஒழுங்கு!

காவல்துறை ஆட்சியளர்களின் ஏவல் துறையாக இருக்கக் கூடாது! கூட்டம்அளவுக்கு அதிகமாக வந்தவுடன் – ஏன்நிறுத்தவில்லைஎன்று கரூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் அரசியல் கட்சி நிர்வாகிகளைப் பார்த்து கேள்வி கேட்கிறார்!

சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல் துறை என்ன செய்தது!

41 மனித உயிர்களை திட்டமிட்டு கொன்று குவித்த ஆளும் கட்சியைப் பார்த்து கேட்க வேண்டிய நீதித் துறை; அய்யகோ மண்டியிட்டு மாபெரும் பழிச் சொல்லுக்கு உள்ளாகியிருக்கிறதே! பரிதாபம்!

தமிழ்நாடு அரசின் உயரதிகாரிகள் அமுதா IAS தலைமையில் ஒரு நாடகம்; பேட்டி என்கிற தலைப்பில்!

செந்தில் பாலாஜி எனும் மனித மிருகத்தை ; அப்பாவி மக்கள் மீது ஏவிவிட்ட கொடூரனும் அவனுடைய குடும்பமும் அரசியலிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும்!

அக்கிரமத்தை தட்டிக் கேட்போரை; தனிமைப்படுத்தி ஒடுக்கிட வெறிப்பிடித்து அலையும்- ஸ்டாலினிடமிருந்து விஜயை காப்பது ஜனநாயகத்தில் ஒவ்வொருவரின் கடமை!

அந்த தார்மீக நெறியைத்தான் மத்திய அரசு செய்கிறது! பாஜக செய்கிறது!

1972 ஆம் ஆண்டில் எம்ஜிஆரையும் 1987 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவையும் காங்கிரசும் அன்றைய மத்திய அரசும் ஆதரிக்காமல் இருந்திருந்தால்; ஸடாலினின் ஓநாய்க்கூட்டம் தமிழ் நாட்டில் கரூர் போன்ற கொலைக் களத்தை உருவாக்கி அப்பாவி தமிழர்களை பலியாக்கி பால் பாயாசம் சாப்பிட்டிருக்கும்!

கரூர் நடுவர் நீதிமன்றம் கண்ணை திறந்து பார்ப்பது நல்லது; யாருடைய கால் பாவையாகவும் யாரும் மாறாமல் பாமர மக்களை காப்பதற்கு பெயர்தான் மனசாட்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *