March 2, 2026
தமிழக முதல்வர், துணை முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள்..!

தமிழக முதல்வர், துணை முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள்..!

தமிழகத்தில் விளையாட்டு துறைக்கு கோடி கோடியாக வாரி வழங்கி வருகின்ற தமிழக முதல்வர் அவர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து அரசு பணிகளை வழங்கி வருகின்ற துணை முதல்வர் விளையாட்டு துறை அமைச்சர் அவர்களுக்கும் தமிழகத்தில் இருக்கும் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பயிற்சியாளர்கள் சார்பில் மணமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழனின் வீரக்கலை கலை கராத்தே விளையாட்டுக்கு அகில இந்திய அளவில் அங்கீகாரம் இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன,ஆனால் அங்கீகாரம் இருப்பதாக பொய் சொல்லி தமிழகத்தில் பல ஆண்டுகளாக கராத்தே வீரர்களை ஏமாற்றி கோடி கணக்கில் ஊழல்கள் செய்து கொள்ளை அடித்து வருகின்ற சங்கம் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷன் என்ற ( TSKA ) சங்கம் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

பள்ளி கல்வி துறை சார்பில் வருகின்ற அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற இருக்கும் ( SGFI ) மாநில கராத்தே தேர்வு போட்டிகளில் ஆயிரக்கணக்கான அப்பாவி மாணவிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

பள்ளி கல்வி துறை சார்பில் நடைபெற இருக்கும் மாநில கராத்தே தேர்வு போட்டியில் TSKA கராத்தே சங்கத்தை சார்ந்த நடுவர்கள் ( JUDGE ) கலந்து கொண்டால்,நிச்சயமாக இவர்களால் மாணவிகளுக்கு பெருத்த ஆபத்து ஏற்படும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத TSKA கராத்தே சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் கராத்தே பயிற்சியாளர்கள் பதினாறுக்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர்கள் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பாதுகாப்பு நலசங்கத்தின் தலைவர் தனசேகரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *