March 2, 2026
தமிழக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையின் கீழ் இராமநாதபுரத்தில் இலவச மரக்கன்றுகள்

தமிழக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையின் கீழ் இராமநாதபுரத்தில் இலவச மரக்கன்றுகள்

தமிழக அரசின் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழக வனத்துறை அமைச்சர் திரு. ராஜ கண்ணப்பன் அவர்களின் முன்னோடி முயற்சிகளால், வனத்துறை திட்டங்கள் மக்களிடம் அதிக அளவில் சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இயற்கைச் சூழ்நிலையை மேம்படுத்தவும், காலநிலை மாற்றத்தால் உருவாகும் சவால்களை சமாளிக்கவும், இராமநாதபுரத்தில் வனபரப்பை 33% ஆக உயர்த்தும் இலக்குடன் வனத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலகர் ஹேமலதா தலைமையிலான வன விரிவாக்க சரகம், பரமக்குடி கமுதக்குடியில் உள்ள மத்திய நர்சரியில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி வருகிறது.

இங்கு தேக்கு, மகாகனி, வேங்கை, ஈட்டி, வேம்பு, தான்றி, பாதாம், புங்கன், இலுப்பை, ஆவி போன்ற பல்வேறு மரக்கன்றுகள் மக்களுக்காக வளர்க்கப்பட்டு, தற்போது இலவசமாக வழங்கி வருகின்றனர். இதில் குறிப்பாக சுற்றுச்சுவர் மற்றும் நீர்ப்பாசன வசதி உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் குறித்து வன சரக அலுவலகர் சுப்பிரமணியன் மற்றும் வனவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்:
இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. கமுதக்குடியில் உள்ள வன அலுவலகத்தில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு மாவட்டம் முழுவதும் அனுப்பப்படுகின்றன. மேலும், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலக வளாகங்கள், தொழிற்சாலைகள், பஞ்சாயத்து இடங்கள், சாலை ஓரங்கள், வீடுகள் மற்றும் வயல்வெளிகளில் மரங்களை நட்டு வளர்க்க மாணவ, மாணவிகளுக்கு பசுமையின் அவசியத்தை உணர்த்தி ஆர்வம் ஏற்படுத்த வனத்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் இந்தத் திட்டத்தில் பங்கேற்று பசுமையை பெருக்க வேண்டும் என்றார்கள்.

மேலும் அவர்கள் கூறுகையில், இந்தத் திட்டத்தை மாநில அளவில் சிறப்பாக செயல்படுத்த தமிழக வனத்துறை அமைச்சர் திரு. ராஜகண்ணப்பன் தலைமையால் வனத்துறை இன்று பல்வேறு புதுமையான திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சென்று, பசுமை வளத்தை பாதுகாக்க முன்னோடி பணிகளை செய்து வருகிறது. எதிர்கால தலைமுறைக்கு சுத்தமான காற்றும், நல்ல சூழலும் கிடைக்க, வனத்துறையின் இந்த நடவடிக்கைகள் மிகுந்த துணை புரிகின்றன என தெரிவித்தார்.

இந்த மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் மூலம் பொதுமக்களிடம் பசுமை வளர்ப்பு விழிப்புணர்வு மேலும் அதிகரித்து, மாவட்டம் முழுவதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *