March 2, 2026
அணைப்பட்டி வைகை ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி பிரச்சாரம்

அணைப்பட்டி வைகை ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி பிரச்சாரம்

நிலக்கோட்டை, செப்.29-

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா வைகை ஆற்றப்படுகையில் காலநிலை மாற்றத்தால் வைகை ஆற்றின் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு செய்வதில் மக்களின் பங்கு என்ற பிரச்சாரத்தை ஒய்ஸ்கா இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக உலக நதிநீர் தினத்தை முன்னிட்டு பசுமை மனிதர் ஜமாலுதீன் தலைமை தாங்கி துவங்கி வைத்தார்.

நிலக்கோட்டை வைகை ஆற்று படுகை கிராமங்களில் உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு வைகாற்றை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அரசு கவனம் செலுத்தப்பட வேண்டும். மணல் கொள்ளையை தடுக்கவும், வைகை ஆற்றுக்கரை ஓரமுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் பழைய துணியை வைகை ஆற்றில் கழட்டி விடக் கூடிய போக்கை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். வழிகாட்டு கரையோரம் பிளாஸ்டிக் குப்பைகள் கூடுவதை உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் தொழிற்சாலை மற்றும் குடிமை கழிவுகள் வைகை ஆற்றில் கலப்புவதை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் வைகை ஆற்றை பாதுகாக்க இரவு நேரத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.

மிகவும் தொன்மையான பாரம்பரியமிக்க வைகை ஆற்றை பாதுகாப்பதில் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. தமிழக நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் அண்ணாதுரை,வைகை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் விஷாலினி,கள ஒருங்கிணைப்பாளர்கள் விக்னேஷ்,சியாமளா, சூர்யா, சுதாதேவி, மதுமிதா, அணைப்பட்டி நடைபாதை வியாபாரிகள் சங்க செயற்குழு உறுப்பினர் பாண்டீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *